என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தீயவர் குலை நடுங்க- திரைவிமர்சனம்
    X

    தீயவர் குலை நடுங்க- திரைவிமர்சனம்

    பரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் ஒன்று மட்டுமே கேட்கும் படியாக இருக்கிறது.

    நாயகன் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ஒரு நாள் எழுத்தாளர் ஒருவர் விபத்தில் சிக்குகிறார். அதன் பிறகு அங்கேயே மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். சில நாட்களில் தொழிலதிபரான ராம்குமார் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார்.

    அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்க, இதை யார் செய்தார்கள் என்பதை தீவிர விசாரணையில் இயங்குகிறார் அர்ஜுன். ஒரு கட்டத்தில் இந்த கொலைகளை எல்லாம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் செய்கிறார் என்பது தெரிய வருகிறது.

    இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் யார்? எதற்காக கொலைகள் செய்கிறார்? போலீஸ் அதிகாரியான அர்ஜுன் எப்படி ஐஸ்வர்யா ராஜேஷை கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நடை, உடை, உடல் மொழி, ஆக்சன் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன காட்சிகளில் கவனம் பெற்று இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழ வைத்திருக்கிறார்.

    அபிராமி வெங்கடாசலம், ஐஸ்வர்யா ராஜேஷ் இன் காதலராக வரும் பிரவீன் ராஜா, தொழிலதிபர் ராம்குமார், போலீஸ் கான்ஸ்டபிள் தங்கதுரை ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    இயக்கம்

    பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் லட்சுமணன். ஒரு கொலை, அதன் பின்னணி, ஒரு பிளாஷ்பேக் என வழக்கமாக பல படங்களில் நாம் பார்த்த கதையை அப்படியே எடுத்திருக்கிறார். முதல் பாதையில் திரைக்கதை புரியாமல் செல்கிறது. இரண்டாம் பாதியில் வழக்கமான திரைக்கதையாகவே செல்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ஒரு திருப்பம் மட்டும் ரசிக்க வைக்கிறது.

    இசை

    பரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் ஒன்று மட்டுமே கேட்கும் படியாக இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்கு ஒட்டவே இல்லை.

    ஒளிப்பதிவு

    சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.

    ரேட்டிங்: 1.5

    Next Story
    ×