ஏ.ஆர்.ரகுமான் இசையில் மனதை உருக்கும் 'தேரே இஷ்க் மே' முதல் பாடல்!

'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கியர் ஆனந்த் எல் ராய்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் மனதை உருக்கும் 'தேரே  இஷ்க் மே' முதல் பாடல்!
Published on

தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' படம் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.

கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

இந்நிலையில் தேரே இஷ்க் மெய்னின் முதல் பாடலான 'உசே கெனா' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இர்ஷாத் கமில் வரிகளில் நிதேஷ் மற்றும் ஜோனிடா ஆகியோர் குரலில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்பாடல் கவனம் ஈர்த்து வருகிறது

இப்படம் வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com