என் மலர்
சினிமா செய்திகள்

பூஜையுடன் தொடங்கியது 'தளபதி 69' படத்தின் வேலைகள்
- விஜய் நடிப்பில் உருவாகும் 69ஆவது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார்.
- விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தி கோட்' ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அவரது 69-வது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
விஜய் நடிப்பில் உருவாகும் 69ஆவது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
இதில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
படத்திற்கான பூஜை இன்று நடைபெற்ற வேளையில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழாவையும் விஜய் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Next Story






