என் மலர்
சினிமா செய்திகள்

தலைவர் தம்பி தலைமையில் - திரை விமர்சனம்
- தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- அரசியல் சூழலை சுற்றி நடக்கும் சம்பவங்கள் எளிமையாக சொல்லப்பட்டுள்ளன.
மலையாள இயக்குநர் இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள தலைவர் தம்பி தலைமையில் படம் இன்று வெளியாகியுள்ளது.
ஒரு அரசியல் குடும்பத்தில் "தலைவரின் தம்பி" என்ற அடையாளத்துடன் வாழும் நாயகன் ஜீவா, அதிகாரம், அரசியல் சூழ்ச்சி மற்றும் குடும்ப அரசியலுக்குள் சிக்கிக்கொள்கிறார். தலைவரின் பெயரும் புகழும் நிழலாக இருக்கும் போது, தம்பியாக இருப்பவரின் அடையாளம் என்ன? அவர் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்துள்ள ஜீவா, அமைதியான நடிப்பை தேர்வு செய்து கதாபாத்திரத்திற்கு தேவையான அளவிலேயே தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல், அரசியல் அழுத்தங்களுக்கு நடுவே சிக்கித் தவிக்கும் ஒருவரின் மனநிலையை இயல்பாக காட்டுகிறார். சில இடங்களில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமான காமெடி பாணியை விட, இந்த படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார். குடும்பம், அரசியல், அதிகாரம் ஆகியவற்றின் இடையில் சிக்கிய ஒரு மனிதனின் குழப்பத்தை அவர் நன்றாக பிரதிபலித்துள்ளார். படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை நேர்த்தியாக செய்துள்ளனர்.
இயக்கம்
குடும்ப அரசியலையும் அதிகார அரசியலையும் மிகைப்படுத்தாமல், ஒரு நடுத்தர பார்வையில் எடுத்துச் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர் நிதிஷ் சகாதேவ். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், படத்தின் கருத்து தெளிவாக பார்வையாளர்களிடம் சென்றடைகிறது. அரசியல் சூழலை சுற்றி நடக்கும் சம்பவங்கள் எளிமையாக சொல்லப்பட்டுள்ளன. கதைக்கு தேவையான அளவிலேயே திருப்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தலைவர் தம்பி தலைமையில் குடும்ப அரசியல், அதிகாரத்தின் நிழல் மற்றும் அடையாள தேடல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைந்த அரசியல் காமெடி படமாக உருவாகியுள்ளது.
இசை
விஷ்ணு விஜயின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
பப்லு அஜுவின் ஒளிப்பதிவு படத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
ரேட்டிங்: 3/5






