என் மலர்

  சினிமா செய்திகள்

  தொடர்ந்து அப்டேட்களை குவிக்கும் விருமன் படக்குழு
  X

  விருமன்

  தொடர்ந்து அப்டேட்களை குவிக்கும் விருமன் படக்குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
  • இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

  கொம்பன் படத்தினை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


  விருமன்

  யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  இந்நிலையில், இந்த படத்தின் 'மதுர வீரன்' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இது தனக்கு பிடித்தமான பாடல் என நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.  Next Story
  ×