என் மலர்

  சினிமா செய்திகள்

  விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்றம் உத்தரவு..
  X

  விஜய் சேதுபதி

  விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்றம் உத்தரவு..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த ஆண்டு விஜய் சேதுபதி மீது மகா காந்தி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
  • இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

  கடந்த ஆண்டு மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக சென்னை , சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

  அதில், நான் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்றபோது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியைப் பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது அவரை பாராட்டி கைக்குழுக்கிய போது அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுப்படுத்தியதாகவும் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

  விஜய் சேதுபதி

  இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

  இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

  Next Story
  ×