என் மலர்

  சினிமா செய்திகள்

  இனி என் அம்மா நிம்மதியாக தூங்குவார் - நடிகர் விஜய் தேவரகொண்டா
  X

  விஜய் தேவரகொண்டா

  இனி என் அம்மா நிம்மதியாக தூங்குவார் - நடிகர் விஜய் தேவரகொண்டா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
  • லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

  பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


  லைகர்

  மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால், படக்குழு தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


  விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே

  இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது சமூகவலைதளப் பக்கத்தில், "ஏற்கனவே இந்தியா முழுக்க இந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அன்பைப் பெற்றது கடவுளின் ஆசீர்வாதமாக உணர்கிறேன். ஆனால் என் அம்மா எங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று உணர்ந்து சிறு பூஜை நடத்தினார். இப்போது நாங்கள் எங்களது பயணத்தைத் தொடரும்போது என் அம்மா நிம்மதியாக தூங்குவார்" எனக் குறிப்பிட்டு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


  Next Story
  ×