என் மலர்

  சினிமா செய்திகள்

  விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்
  X

  விஜய் ஆண்டனி

  விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் ஆண்டனி தற்போது கோலிசோடா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய விஜய் மில்டன் படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்திற்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

  தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் 'மழை பிடிக்காத மனிதன்' என்கிற படத்தில் தற்போது கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'இன்ஃபினிட்டி ஃபிலிம்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

  மழை பிடிக்காத மனிதன்


  இந்நிலையில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது குறித்த புகைப்படத்தை படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


  Next Story
  ×