என் மலர்

  சினிமா செய்திகள்

  அஞ்சாத பாதுகாவலர்களை சந்திக்கவும்.. பொன்னியின் செல்வன் அப்டேட்..
  X

  பொன்னியின் செல்வன்

  அஞ்சாத பாதுகாவலர்களை சந்திக்கவும்.. பொன்னியின் செல்வன் அப்டேட்..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
  • பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம்.

  கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்-1". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.


  பொன்னியின் செல்வன்

  முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.


  பொன்னியின் செல்வன் போஸ்டர்

  அதில், "சோழர் பெருமையின் அஞ்சாத பாதுகாவலர்களை சந்திக்கவும்" என்று குறிப்பிட்டு சரத்குமார் 'பெரிய பழுவேட்டரையர்' என்ற கதாபாத்திரத்திலும் பார்த்திபன் 'சின்ன பழுவேட்டரையர்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பழுவேட்டரையர் யார்? என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


  Next Story
  ×