search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எங்களுக்கு ஒத்துழைக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.. நடிகர் அஜித் அறிக்கை
    X

    எங்களுக்கு ஒத்துழைக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.. நடிகர் அஜித் அறிக்கை

    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இறுதி சடங்குகளுக்கு ஒத்துழைப்பு தரும்படி அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அஜித்தின் தந்தை இறுதிச்சடங்குக்கு ஒத்துழைப்பு தரும்படி அஜித் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.


    அஜித்தின் அறிக்கை

    கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

    இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

    எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். அனுப் குமார்.. அஜித் குமார்.. அனில் குமார் " என்று அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×