search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
    X

    சிம்பு

    சிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    • சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார்.
    • சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு 'பத்து தல' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பத்து தல போஸ்டர்

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'பத்து தல' படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    இந்நிலையில், பத்து தல ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகிற டிசம்பர் 14-ம் தேதி பத்து தல திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    Next Story
    ×