search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பெண்களிடம் பெருகும் ஆதரவு ..மாமனிதன் படத்தை கொண்டாடும் குடும்பங்கள்..
    X

    மாமனிதன்

    பெண்களிடம் பெருகும் ஆதரவு .."மாமனிதன்" படத்தை கொண்டாடும் குடும்பங்கள்..

    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “மாமனிதன்”.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".

    இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


    விஜய் சேதுபதி - காயத்ரி

    "மாமனிதன்" திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைவருக்குமான படமாக "மாமனிதன்" இருப்பதால், ஒருமுறையாவது இப்படத்தை காண வேண்டும் என்ற ஆவல் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

    சமீப காலமாக வந்த படங்களில், குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக "மாமனிதன்" இருப்பதால், பெண்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதி வருகிறது. இப்படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×