search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    செக் மோசடி வழக்கு.. அபராதம் செலுத்திய லிங்குசாமி
    X

    லிங்குசாமி 

    செக் மோசடி வழக்கு.. அபராதம் செலுத்திய லிங்குசாமி

    • ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி.
    • காசோலை பணமில்லாமல் திரும்பிய வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தி வாரியர். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், 'எண்ணி ஏழு நாள்' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல படங்களை தயாரித்ததையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற ரூ.1 கோடியே 3 லட்சம் கடனை திரும்பச் செலுத்த இயக்குனர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, இயக்குனர் லிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்ததையடுத்து இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் செக் மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி உட்பட அவரது சகோதரர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அதே சமயம் மேல் முறையீடு செய்ய அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

    லிங்குசாமி

    அதன்பின்னர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த லிங்குசாமி , மேல்முறையீடு செய்து சட்ட ரீதியாக பிரச்சனையை சந்திப்போம் எனத் தெரிவித்திருந்த நிலையில், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் அபராத தொகையை லிங்குசாமி செலுத்தியுள்ளார்.

    Next Story
    ×