என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரஜினியுடன் கபில் தேவ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்
    X

    ரஜினி - கபில் தேவ்

    ரஜினியுடன் கபில் தேவ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்

    • ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்து வருகிறார்.
    • ரஜினியுடன் கபில்தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பைக்கு சென்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

    Next Story
    ×