search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வாரிசு படம் பார்த்து கண்கலங்கிய தந்தை.. நெகிழ்ந்து போன இயக்குனர் வம்சி..
    X

    வம்சி - விஜய்

    'வாரிசு' படம் பார்த்து கண்கலங்கிய தந்தை.. நெகிழ்ந்து போன இயக்குனர் வம்சி..

    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'.
    • இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு'நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வாரிசு

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' நேற்று திரையரங்குகளில் வெளியானது. மேலு, 'வாரிசு' திரைப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    இயக்குனர் வம்சியை கட்டியணைத்து கண்கலங்கிய தந்தை

    இந்நிலையில் 'வாரிசு'படத்தை பார்த்து கண்கலங்கியபடி தன் தந்தை தன்னை கட்டியணைக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் வம்சி, "இன்று எனது அப்பா 'வாரிசு' படத்தைப்பார்த்து நெகிழ்ந்ததே எனது மிகப்பெரிய சாதனை; என் வாழ்நாள் முழுவதும் போற்றும் தருணம் இது. நீங்கள் தான் என் ஹீரோ.. லவ் யூ அப்பா" என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    Next Story
    ×