search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இணையத்தை கலக்கும் தனுஷ் பட பாடல்
    X

    வாத்தி

    இணையத்தை கலக்கும் தனுஷ் பட பாடல்

    • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாத்தி'.
    • இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

    வாத்தி - தனுஷ்


    சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இரண்டாவது பாடலான 'நாடோடி மன்னன்' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலனாது.


    வாத்தி

    இந்நிலையில் 'நாடோடி மன்னன்' பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 1 லட்சம் லைக்குகளை பெற்று இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

    'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×