search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனுஷுடன் இணையும் லோகேஷ் பட ஹீரோ.. வெளியான தகவல்
    X

    தனுஷ்

    தனுஷுடன் இணையும் லோகேஷ் பட ஹீரோ.. வெளியான தகவல்

    • இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர்.
    • இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


    நானே வருவேன்

    இதைத் தொடர்ந்து, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். வரலாற்று பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் வீடியோ அண்மையில் வெளியானது.


    தனுஷ் - சந்தீப் கிஷான்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாநகரம் படத்தின் மூலம் பிரபலமான சந்தீப் கிஷான், கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாநகரம் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×