search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனுஷ் பிறந்தநாள்: அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள்
    X

    தனுஷ்

    தனுஷ் பிறந்தநாள்: அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள்

    • தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.
    • வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

    பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    தனுஷ் - வாத்தி

    இந்நிலையில் 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷின் பிறந்தநாள் விருந்தாக ரசிகர்களுக்கு வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற 27-ஆம் தேதியும், டீசர் 28-ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    வருகிற 28-ஆம் தேதி தனுஷ் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×