என் மலர்

  சினிமா செய்திகள்

  தேஜாவு திரைப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும் - நடிகர் அருள்நிதி
  X

  அருள்நிதி

  'தேஜாவு' திரைப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும் - நடிகர் அருள்நிதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'.
  • 'தேஜாவு' திரைப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

  அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


  தேஜாவு படக்குழு

  இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

  இந்நிலையில் 'தேஜாவு' படத்தின் வெற்றியை இன்று படக்குழுவினர் கொண்டாடினர். இதில் நடிகர் அருள்நிதி கூறுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். 'தேஜாவு' படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி அவர்கள் இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து இதனை வெற்றி படமாக்கியுள்ளார்.


  தேஜாவு படக்குழு

  இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் "தேஜாவு" திரைப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும். இப்படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.


  Next Story
  ×