search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மரியாதை என்பது சுதந்திரம்.. ட்ரெண்டாகும் கேப்டன் மில்லர் போஸ்டர்
    X

    மரியாதை என்பது சுதந்திரம்.. ட்ரெண்டாகும் கேப்டன் மில்லர் போஸ்டர்

    • தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    கேப்டன் மில்லர் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, "கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர். மரியாதை என்பது சுதந்திரம்' என்று குறிப்பிட்டுள்ளார்.



    Next Story
    ×