என் மலர்
சினிமா செய்திகள்

புதிய அறிவிப்பை வெளியிட்ட கேப்டன் மில்லர்
- தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கேப்டன் மில்லர் போஸ்டர்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை (ஜூன் 30) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Next Story






