என் மலர்

    சினிமா செய்திகள்

    காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும் - வைரலாகும் பிக்பாஸ் வீடியோ
    X

    பிக்பாஸ் சீசன்-6

    காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும் - வைரலாகும் பிக்பாஸ் வீடியோ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ்.
    • இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    பிக்பாஸ் சீசன்-6

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீஷினில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    பிக்பாஸ் சீசன்-6

    இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஆறாவது சீசனை தொகுத்து வழங்குகிறார். சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீனனின் புரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

    பிக்பாஸ் சீசன்-6

    இந்நிலையில் புதிய வீடியோவை பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது. அதில், காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்! பிக்பாஸ் சீசன்-6 விரைவில்.. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×