search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திரைப்பிரபலங்கள் வெளியிட்ட அசோக் செல்வன் போர் தொழில் போஸ்டர்
    X

    அசோக் செல்வன்

    திரைப்பிரபலங்கள் வெளியிட்ட அசோக் செல்வன் 'போர் தொழில்' போஸ்டர்

    • இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'போர் தொழில்'.
    • இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    போர் தொழில் போஸ்டர்

    அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் கவுதம் மேனன், வெங்கட் பிரபு, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

    'போர் தொழில்' திரைப்படம் வருகிற ஜுன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×