என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அருண் விஜய் கொடுத்த அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்
    X

    அருண் விஜய் கொடுத்த அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்

    • இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள படம் யானை.
    • யானை திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    அருண் விஜய்யின் 33-வது படம் 'யானை'. ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் யானை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி ஜூலை 1-ஆம் தேதிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    யானை


    இந்நிலையில் 'யானை' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சண்டாளியே' பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று (17.06.2022) மாலை 7 மணிக்கு வெளியாகும் என அருண் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு போஸ்டருடன் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    Next Story
    ×