என் மலர்

    சினிமா செய்திகள்

    பிரபல நடிகருடன் இணையும் தமன்னா
    X

    தமன்னா

    பிரபல நடிகருடன் இணையும் தமன்னா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை தமன்னா.
    • இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'பப்ளி பவுன்சர்' செப்டம்பர் 23-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    தமிழில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். திரைத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அதன்பின்னர், தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.


    திலீப் - தமன்னா

    இந்நிலையில், நடிகை தமன்னா முதல் முறையாக மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார். இயக்குனர் அருண் கோபி இயக்கத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார்.

    இப்படத்தின் பூஜை கொல்லத்தில் உள்ள கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 130 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


    திலீப் - தமன்னா

    தமன்னா நடித்துள்ள 'பப்ளி பவுன்சர்' திரைப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×