என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அரசியல்வாதிகள் நடிகர்களாகும்போது; நடிகர்கள் அரசியல்வாதிகளாவது தப்பே இல்லை -விஷால் அதிரடி
    X

    அரசியல்வாதிகள் நடிகர்களாகும்போது; நடிகர்கள் அரசியல்வாதிகளாவது தப்பே இல்லை -விஷால் அதிரடி

    • நடிகர் விஷால் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
    • இவர் நடிகர்கள் அரசியலுக்கு வருவது மேற்கொண்டு நல்லது பண்ணலாம் என்கிற எண்ணத்தில் தான் என்று கூறினார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் நேற்று (27-07-2023) இந்திய குடியரசு தலைவரும் விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

    பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷாலிடம் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அரசியல் என்பது சமூக சேவை, வியாபாரம் கிடையாது. நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் அரசியலுக்கு வருவது புதுசு கிடையாது. அரசியல்வாதிகள் நடிகர்களாக நடிக்கும் போது, நடிகர்கள் அரசியல்வாதிகளாவது தப்பு கிடையாது. எல்லா அரசியல்வாதிகளும் சாதி, மதம், எல்லாமே பார்க்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வருவது மேற்கொண்டு நல்லது பண்ணலாம் என்கிற எண்ணத்தில் தான்.


    தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைதளம், போதைப்பொருள், மது ஆகியவற்றிற்கு மாணவர்கள் அடிமையாகிவிட்டார்கள். இதை தவிர்த்து ஆரோக்கியமான வழியில் அவர்களது வாழ்க்கையை கொண்டு சேர்த்தார்கள் என்றால் அவர்கள் மூலம் ஒரு பத்து பேர் பயன்படுவார்கள்.

    போதைப்பொருள் பயன்பாடு என்பது கொரோனாவிற்கு பின்னிருந்து அதிகரித்துள்ளது. அதை தடுப்பதற்கான வழிகளில் இறங்கியுள்ளோம். போதைப்பொருள் பயன்படுத்தும் போது ஏற்படும் சிறிய சந்தோஷத்திற்காக மக்கள் பலியாகின்றனர். ஒரு நல்ல விஷயத்திற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்துவது நல்லது" என்று கூறினார்.

    Next Story
    ×