என் மலர்

  சினிமா செய்திகள்

  நிர்வாண புகைப்படம் வெளியிட்ட ரன்வீர் சிங்.. ஆடை வழங்கி போராட்டம் நடத்திய தொண்டு நிறுவனம்
  X

  ரன்வீர் சிங்

  நிர்வாண புகைப்படம் வெளியிட்ட ரன்வீர் சிங்.. ஆடை வழங்கி போராட்டம் நடத்திய தொண்டு நிறுவனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்.
  • சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு ரன்வீர் சிங் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தார்.


  அவரது நிர்வாணப் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


  இந்த நிலையில் டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவருக்கு ஆடைகள் நன்கொடையாக அனுப்பும் போராட்டத்தை தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ளது. அங்குள்ள சாலை ஓரத்தில் மேசை மீது ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படத்தை ஒட்டிய பெட்டி வைத்துள்ளனர். அந்த பெட்டிக்குள் பலர் ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் நன்கொடை வழங்கும் விதமாக பழைய பேண்ட், சட்டை, பனியன், டீசர்ட் போன்ற துணிமணிகளை கொண்டு வந்து போடுகிறார்கள். ஆடை நன்கொடை வழங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


  Next Story
  ×