என் மலர்

  சினிமா செய்திகள்

  இணையத்தை கலக்கும் நட்டி பட டீசர்
  X

  நட்டி - வெப்

  இணையத்தை கலக்கும் நட்டி பட டீசர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய திரையுலகில் ஒளிப்பதிவாளர், நடிகர் என பண்முகத்தன்மை காட்டுபவர் நட்டி.
  • இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

  மிளகாய், சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு, சண்டி முனி, கர்ணன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நட்டி (எ) நட்ராஜ். இவர் கடைசியாக நடித்த கர்ணன் திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

  இதனை தொடர்ந்து நட்டி நடிப்பில் சம்பவம், இன்ஃபினிட்டி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. இதனிடையில் நட்டி நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள திரைப்படம் வெப். இப்படத்தை இயக்குனர் ஹரூன் இயக்கியுள்ளார். இதில் காளி மற்றும் இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.எம்.முனிவேலன் தயாரித்துள்ளார். இப்படத்தை கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

  வெப்

  இந்நிலையில் வெப் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பாக இடம் பெற்றுள்ள இந்த டீசர் தற்போது அனைவரையும் கவர்ந்து இணையத்தை கலக்கி வருகிறது.  Next Story
  ×