சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்யலாம்?- தமன்னா தரும் 'டிப்ஸ்'

நகை விற்பனையகம் தொடங்கி தொழில் அதிபராகவும் கலக்க தொடங்கி இருக்கிறார். சரியாக முதலீடு செய்து பல மடங்கு பெருக்குவது எப்படி? என யோசித்து பார்க்க வேண்டும்.
சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்யலாம்?- தமன்னா தரும் 'டிப்ஸ்'
Published on

வெள்ளாவி வச்சு வெளுத்த மேனி கொண்ட நடிகையான தமன்னா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். தற்போது நகை விற்பனையகம் தொடங்கி தொழில் அதிபராகவும் கலக்க தொடங்கி இருக்கிறார். இதற்கிடையில் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்யலாம்? என்பது குறித்து 'டிப்ஸ்'களை நடிகர்- நடிகைகளுக்கு அறிவுரையாக வழங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், "சினிமா பிரபலங்கள் என்னதான் கோடிகளில் சம்பாதித்தாலும், அதை சரியாக முதலீடு செய்து பல மடங்கு பெருக்குவது எப்படி? என யோசித்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் இறுதியில் எதுவுமே இல்லாமல் போய்விடும். எனவே சரியான முதலீடு தான் நம்மை காப்பாற்றும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

என்ன ஒரு தொலைநோக்கு பார்வை...

X

Maalai Malar
www.maalaimalar.com