என் மலர்
சினிமா செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு U/A சான்றிதழ்
- ரெட்ரோ சூர்யாவின் 44ஆவது படமாகும்.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத் தளத்தில் டிரெய்லரை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், திரைப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியது. ரெட்ரோ 2 மணி நேரம் 48 நிமிட படமாக அமைந்துள்ளது.






