"ஆண் பாவம் பொல்லாதது" படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு

ஆண் பாவம் பொல்லாதது கடந்த அக்டோபர் 31-ந்தேதி வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
"ஆண் பாவம் பொல்லாதது" படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு
Published on: 

2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 'ஆண்பாவம் பொல்லாதது' படம் கடந்த அக்டோபர் 31-ந்தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'ஆண்பாவம் பொல்லாதது' படம் உலகளவில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆண்பாவம் பொல்லாதது படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com