என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    P Susheela
    X

    பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி

    • பி.சுசீலா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • வயது மூப்பு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    சென்னை:

    சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

    கடந்த மார்ச் மாதம் திருப்பதியில் பிரபல பின்னணி பாடகி சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.

    Next Story
    ×