என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    டேனியல் பாலாஜி நினைவலைகளை பகிர்ந்த பாடகி கல்பனா
    X

    டேனியல் பாலாஜி நினைவலைகளை பகிர்ந்த பாடகி கல்பனா

    • பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை பிரபல பாடகி கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார்.
    • எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்தவள் நான்.

    'வேட்டையாடு விளையாடு', 'காக்க காக்க' உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் டேனியல் பாலாஜி.

    சினிமாவில் கொடூர வில்லன் தோற்றத்தை வெளிப்படுத்தி வந்த டேனியல் பாலாஜி நிஜ வாழ்க்கையில் ஆன்மீகத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். ஆவடியில் ரத்தூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை அவரது சொந்த செலவில் கட்டி இருக்கிறார்.

    சினிமாவில் வில்லனாகவும் நிஜ வாழ்க்கையில் ஆன்மீகவாதியாகவும் இருந்து வந்த டேனியல் பாலாஜி கடந்த ஆண்டு மார்ச் 29-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

    அவர் மரணம் அடைந்து முதல் ஆண்டு நேற்று நிறைவடைந்ததையொட்டி அவர் நடித்த கடைசி படமான ஆர்.பி.எம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை பிரபல பாடகி கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார்.

    படத்தின் கதாநாயகனாக டேனியல் பாலாஜி மற்றும் கோவை சரளா, இளவரசு, தேவதர்ஷினி, ஒய்.ஜி மகேந்திரன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    சஸ்பென்ஸ் திரில்லர் கலந்து உருவாகியுள்ள ஆர்.பி.எம் படம் தான் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம்.

    டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பாடகி கல்பனா ராகவேந்தர் பேசியதாவது:-

    எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்தவள் நான். மண் மணம் என்று சொல்வார்கள் அது போல் வளர்ந்த பொண்ணு நான். சின்ன வயதில் சில படங்களில் நடித்தேன் தொடர்ந்து பாடல்கள் மேல் எனக்கு இருந்த ஆர்வத்தினால் படங்களில் நடிக்கவில்லை. இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்து படத்தின் கதாநாயகனாக நடிப்பதற்கு டேனியல் பாலாஜியிடம் பேசினோம். பல கட்டங்கள் கதை கேட்ட பிறகுதான் நடிப்பதற்கு சம்மதித்தார்.

    அவர் மரணம் அடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு படக்குழுவினரிடம் நான் நடிக்க இருக்கும் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும். இதற்குப் பின் நான் முழு நேர ஆன்மீகவாதியாக ஆகிவிடுவேன் என கூறியிருக்கிறார். ஆனால் எதிர்பாரவிதமாக காலமாகிவிட்டார். அவரது இறப்பு பேரிழப்பு. மிகச்சிறந்த நடிகர். படப்பிடிப்பு தளத்தில் அவரது நடிப்பை பார்த்து நான் நடிக்க கற்றுக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் டேனியல் பாலாஜி தாயாரும் பங்கேற்றார்.

    Next Story
    ×