என் மலர்
சினிமா செய்திகள்

ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு சிம்பு செய்த உதவி
- சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
- திரைத்துறையினர் பலரும் பல உதவிகளை செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இந்த காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறப்பு திரையுலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இவரது குடும்பத்திற்கு திரைத்துறையினர் பலரும் பல உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்பு அவரது குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாய் காசொலையை கொடுத்துள்ளார் அதை சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில்வா மாஸ்டர் கூறியுள்ளார்.
Next Story






