என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஷ்ணு விஷால் நடித்த ஆர்யன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
    X

    விஷ்ணு விஷால் நடித்த ஆர்யன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

    • கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார்.
    • ஆர்யன் படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.

    விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

    இது தவிர்த்து கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

    இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீனாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இது ஒரு போலிஸ் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் அமைக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதில் படப்பிடிப்பு காட்சிகள், விஷ்ணு விஷால் சண்டையிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×