சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம்

ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம்
Published on

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பிற்பகல் 3 மணியளவில் சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

திரைத்துறையினரின் படை சூழ, கண்ணீர் மல்க ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிலையில், ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com