என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர் - மருத்துவமனையில் அனுமதி
    X

    படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர் - மருத்துவமனையில் அனுமதி

    • சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
    • தொடர் படப்பிடிப்பு காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

    சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    இந்தநிலையில் ரோபோசங்கர் நேற்று மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

    இது குறித்து அவரது மனைவி கூறுகையில், 'தொடர் படப்பிடிப்பு காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் 2 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற டாக்டர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர் என்றார்.

    ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார். மீண்டும் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×