என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரிவால்வர் ரீட்டா- திரைவிமர்சனம்
    X

    ரிவால்வர் ரீட்டா- திரைவிமர்சனம்

    சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    நாயகி கீர்த்தி சுரேஷ் பாண்டிச்சேரியில் தாய் ராதிகா, அக்கா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் அக்கா குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில், பிரபல ரவுடி சூப்பர் சுப்பராயன் போதையில் வீட்டுக்கு வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ரவுடியை கீர்த்தி சுரேஷும், ராதிகாவும் அடிக்கிறார்கள். மயங்கி கீழே விழுந்த ரவுடி இறந்து விடுகிறார்.

    சூப்பர் சூப்பராயன் பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ் திட்டம் போடுகிறார். இதற்கிடையில் ரவுடியின் எதிர் கும்பல் பிணத்தை அடைய முயற்சி செய்கிறார்கள். சூப்பர் சுப்பராயனின் மகன் சுனில் தந்தையைத் தேடி அலைகிறார்.

    இறுதியில் கீர்த்தி சுரேஷ் சூப்பர் சூப்பராயனின் பிணத்தை எப்படி அப்புறப்படுத்தினார்? பிணத்தை அடைய நினைத்த கும்பலின் நிலை என்ன ஆனது? தந்தை தேடி அலைந்த சுனில் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதி கதை?

    நடிகர்கள்

    படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் ஆரம்பித்திலேயே டெலிவரிக்கு பிளான் சொல்லும் காட்சி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பிக்கும் காட்சி, சுனிலுடன் நீண்ட வசனம் பேசும் காட்சி, ஆகிய இடங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவருக்கு அடுத்தபடியாக தாயாக நடித்திருக்கும் ராதிகா தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் சுனில் படம் முழுக்க தந்தையை இறுக்கமான முகத்துடன் தேடி வருகிறார். அதிக வசனமும் அதிக முக பாவனைகள் இல்லாதது வருத்தம். போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய், ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. ரெடிங் கிங்ஸ்லி, கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி. சென்ராயன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.

    இயக்கம்

    கர்மா இஸ் பூமராங் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜே கே சந்துரு. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்திருக்கிறார். ஆனால் டார்க் காமெடி பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

    இசை

    சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    ரேட்டிங்: 2.5/5

    Next Story
    ×