என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கோவிந்தா பாடலை நீக்குக.. எடப்பாடியிடம் மனு அளித்த பவன் கல்யாண் கட்சி
    X

    கோவிந்தா பாடலை நீக்குக.. எடப்பாடியிடம் மனு அளித்த பவன் கல்யாண் கட்சி

    • பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் உருவாகியுள்ளது.
    • இந்த படம் வருகிற 16-ந் தேதி வெளியாக உள்ளது.

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் உருவாகியுள்ளது. ஆர்யா தயாரித்திருக்கும் இந்த படம் மே 16-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வரும் கோவிந்தா கோவிந்தா பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

    இந்து மக்கள் கொண்டாடும் புனித ஸ்தலங்களில் ஒன்று ஆந்திராவில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இந்துக்களின் மனம் புண்படும் வகையில் கோவிந்தா கோவிந்தா கிசா 47 பாடலை வைத்திருக்கிறார்கள் என புகார்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை வேண்டுமென்று திருப்பதி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஜனசேனா கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

    மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

    Next Story
    ×