என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்: மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
    X

    நடிகர் ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்: மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

    • இத்தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து 2023-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
    • பலரும் ராம் சரண்- உபாசனாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து 2023-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அப்பெண் குழந்தைக்கு கிளின் காரா என பெயர் சூட்டி இருந்தனர்.

    இதனை தொடர்ந்து, உபாசனா மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில் மொத்த குடும்பமும் புது உறுப்பினரின் வருகைக்காக காத்திருந்தனர்.

    இந்த நிலையில், ராம் சரண்- உபாசனா தம்பத்திக்கு நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பதாக ராம்சரணின் தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மிகுந்த மகிழ்ச்சியுடனும், நிறைந்த இதயத்துடனும் ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை. குழந்தைகளும், தாயும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர். இந்த குழந்தைகளை எங்கள் குடும்பத்தில் வரவேற்பது தாத்தா பாட்டிகளாகிய எங்களுக்கு மகிழ்ச்சி. அனைவரின் பிரார்த்தனைகள், அன்பு, ஆசீர்வாதங்கள் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றி கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பலரும் ராம் சரண்- உபாசனாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.



    Next Story
    ×