என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராஜா வீட்டு கன்னுக்குட்டி- திரைவிமர்சனம்
    X

    ராஜா வீட்டு கன்னுக்குட்டி- திரைவிமர்சனம்

    டைசன் ராஜ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம்.

    சிங்கப்பூரில் வசிக்கிற நாயகன் ஆதித் சிலம்பரசன் சொந்த ஊருக்கு வந்ததும் தனது காதலியை தேடிப் போகிறார். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்ட விவரம் தெரிந்து அதிர்ச்சியடைகிறார். அந்த அதிர்ச்சியிலிருந்தும் கவலையிலிருந்தும் அவனை மீட்க அவனது நண்பன் தனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறார்.

    நாட்கள் நல்லபடியாக நகர முரளியின் மனைவி தாய்மையடைகிறாள். அந்த சந்தர்ப்பத்தில் தனது முன்னாள் காதலியைப் பற்றி சில விஷயங்கள் முரளியின் கவனத்துக்கு வருகிறது. அவளுக்கு திருமணமான விவரம் தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட பல மடங்கு அதிர்ச்சியடைகிறார்.

    இறுதியில் ஆதித் சிலம்பரசன் அதிர்ச்சி அடைய காராரணம் என்ன? அவரது வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆதித் சிலம்பரசன், பெண்ணின் குணமறிந்து காதலில் விழும்போதும், நண்பனின் தங்கையை திருமணம் செய்யும்போதும், நடிப்புக்குப் புதியவர் என்பது தெரியாதபடி உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். காதலியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, நாயகனுடன் காதல், வேறொருவருடன் வாழ்க்கை, என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். வர்ஷிதா, நாயகனுக்கு நண்பனாக வருகிற தம்பி சிவன், அனுகிருஷ்ணா, சரத், ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    காதல் கதையே மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.பி.ராஜீவ். மனிதர்களை சந்தர்ப்பச் சூழ்நிலை என்னவெல்லாம் செய்யும் என்பதை சொல்ல வந்திருக்கிறார். நாயகன் காதலியை தவிக்கவிட்டு வெளிநாடு சென்றதற்கான காரணம் தெளிவாக இல்லை. லாஜிக்கே இல்லாமல் நகரும் சில காட்சிகள் படத்திற்கு பலவீனம்.

    இசை

    டைசன் ராஜ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம்.

    ஒளிப்பதிவு

    ஹரிகாந்த்தின் ஒளிப்பதிவை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

    Next Story
    ×