என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மெட்ராஸ் மேட்னி படத்தின் `என்னடா பொழப்பு இது பாடலின் ப்ரோமோ ரிலீஸ்
    X

    மெட்ராஸ் மேட்னி படத்தின் `என்னடா பொழப்பு இது' பாடலின் ப்ரோமோ ரிலீஸ்

    • அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
    • இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.

    திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் மே 19 ஆம் தேதி வெளியாகிறது. இப்பாடலை வைகை புயல் வடிவேலு பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாடலுக்கு `என்னடா பொழப்பு இது" என தலைப்பு வைத்துள்ளனர். பாடல் வரிகளை சினேகன் எழுதியுள்ளார். பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி கே, இசை கே சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொள்கின்றனர்.

    Next Story
    ×