என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ரூட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்
    X

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 'ரூட்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

    • கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
    • சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, அக்டோபர் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அதனை தொடர்ந்து இரண்டாவது லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

    இந்த நிலையில், 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தயாரிப்பாளர் ஷேக் முஜீப் கூறியதாவது, "படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எடிட்டிங் மற்றும் பின்னணி இசை முதல் VFX மற்றும் ஒலி வடிவமைப்பு வரை ஒவ்வொரு துறையும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்படத்தின் மூலம் திரையரங்கில் புதிய அனுபவத்தை ரசிகர்கள் அனுபவிப்பார்கள் என்பதை நம்புகிறோம் என கூறியுள்ளார்.

    Next Story
    ×