என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    VJ சித்து இயக்கி நடிக்கும் `டயங்கரம் படத்தின் பூஜை வீடியோ வெளியீடு
    X

    VJ சித்து இயக்கி நடிக்கும் `டயங்கரம்' படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

    • சமீபத்தில் சித்து டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
    • தற்போது சித்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

    பிரபலமான தமிழ் யூடியூப் சேனல்களில் விஜே சித்து vlogs முக்கிய இடைத்தை வகிக்கும்.இவர்களின் வீடியோ அனைத்துமே மில்லியன் வியூஸ்களை அள்ளும். இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பல இளைஞர்களில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இவர்களது வீடியோக்கள் இருப்பதால் மக்கள் இதனை கொண்டாடி ரசித்து வருகின்றனர்.

    சமீபத்தில் சித்து மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    இந்நிலையில் அடுத்ததாக சித்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவரே படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டயங்கரம் என தலைப்பிட்டுள்ளனர்.

    இப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×