தள்ளிப்போகும் சக்தித் திருமகன்... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

சக்தி திருமகன் படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியின் 25வது படமாக இப்படம் உருவாகியுள்ளது.
தள்ளிப்போகும் சக்தித் திருமகன்... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

`நான்' படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் மார்கன்' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சக்தித் திருமகன் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பட ரிலீஸ் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com