மம்மூட்டியின் புதிய பட அறிவிப்பு.. 'டைட்டில்' இதுதான்

இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள்
மம்மூட்டியின் புதிய பட அறிவிப்பு.. 'டைட்டில்' இதுதான்
Published on: 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.

இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக கவுதம் வாசுதேவ் மேனனுடன் மம்மூட்டி இணைந்து நடித்த 'பசூகா' படம் வரும் ஏப்ரல் 10 அன்று வெளியாகிறது.

இந்த நிலையில் மம்மூட்டியின் அடித்த பட அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பேனி தயாரிக்கிறது.

குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரை வெளியிட்டு, இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com