என் மலர்
சினிமா செய்திகள்

மம்மூட்டி நடித்த 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது

- இப்படத்தில் மம்முட்டி ஒரு டிடெக்டிவாக நடித்துள்ளார்.
- இந்த திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். இதனிடையே இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை முன்னணியாக கொண்டு 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார்.
இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க விஷ்ணு ஆர் தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகவுள்ளது. இப்படத்தில் மம்முட்டி ஒரு டிடெக்டிவாக நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
Here are some visuals from #DominicAndTheLadiesPurse, my first in Malayalam and more importantly, with the legendary #Mammootty!▶️ https://t.co/yUVMLjFbgn In Cinemas from Jan 23 #MammoottyKampany #SamadTruth #TruthGlobalFilms #WayfarerFilms pic.twitter.com/PSfleNG76D
— Gauthamvasudevmenon (@menongautham) January 8, 2025