என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Madharaasi An engaging commercial entertainer - படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
    X

    Madharaasi An engaging commercial entertainer - படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

    மதராஸி திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் படத்தை பாராட்டி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "Madharaasi பல சுவாரஸ்யமான தருணங்களைக் கொண்ட ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

    ARMurugadoss உணர்ச்சிகளை அற்புதமாக கையாண்டுள்ளார். காதலையும் கிரைமையும் இணைத்த விதம் அற்புதம்.

    சிவகார்த்திகேயனின் கதாபாத்திர சித்தரிப்பு சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது, அதை அவர் அற்புதமாக வெளிப்படுத்தினார் - ஒரு அதிரடி ஹீரோவாகவும் அசத்தியுள்ளார்! அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. Vidyut Jammwal ஆஹா! பார்வையாளர்களை அவரது ஸ்டைலால் கட்டி போடுகிறார். இப்படத்தை வழங்கிய மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்! என கூறினார்.

    Next Story
    ×