என் மலர்
சினிமா செய்திகள்

காதல், அரசியல், ஆன்மீகம் : அசோக்குமார் - சாயாதேவி இணையும் 'அலப்பறை'!
- படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது
- படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார்.
முருகா, புடிச்சிருக்கு, கோழி கூவுது, பெஸ்டி, பிரியமுடன் பிரியா போன்ற படங்களில் நடித்த அசோக்குமார் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள படம் 'அலப்பறை'. கதாநாயகியாக பிரபல இயக்குநரும், நடிகருமான "யார்" கண்ணனின் மகள் சாயாதேவி நடித்திருக்கிறார். சி.எஸ்.கே சினிமா தயாரிக்கும் இப்படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார்.
பி.எல் தேனப்பன், 'யார்' கண்ணன், 'நமோ' நாராயணன், அன்வர் அலிகான், கோதண்டம், வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி, தம்பிசிவன், ஹரிநாத், ரதியா ஹரி, ஆலந்தூர் பிரவீன்குமார் மற்றும் வேல்குமார் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.
உலக அரசியலை கற்றுத் தேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக தன் நண்பன் மூலம் அரசியலில் நுழைகிறான். விதியோ அவனை ஒரு ஆன்மீகத் தலைவனாக மாற்றி விட்டது. முடிவில் அவன் காதலின் நிலை என்ன? தன் அரசியலின் பார்வை என்ன?அல்லது ஆன்மீகவாதியாக தொடர்ந்தானா? என்பதே கதைகளம் என்கிறார் இயக்குநர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






