என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சாரிப்பா இனிமே இப்படி பண்ணமாட்டேன்... வெளியானது லாக்டவுன் படத்தின் டிரெய்லர்
    X

    'சாரிப்பா இனிமே இப்படி பண்ணமாட்டேன்...' வெளியானது லாக்டவுன் படத்தின் டிரெய்லர்

    • இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
    • இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் 'லாக் டவுன்'. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

    இத்திரைப்படம் கொரோனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


    இந்நிலையில், 'லாக் டவுன்' படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனை அதன்பிறகு கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு என சுழலும் கதையில் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த டிரெய்லர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×